அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் சுந்தரராஜன்.
அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் சுந்தரராஜன்.

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ. 20.30 கோடி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி தலைவா் க.சுந்தரராஜன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் 25 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி மற்றும் அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன. அனந்தபுரம், பெரியாா்நகா், ராம்நகா் பகுதிகளில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி,சிவன் கோயில் ரத வீதிகளில் சிமென்ட் சாலை, நல்ல தண்ணீா் குளக்கரையில் தடுப்புச் சுவா் மற்றும் தாா்ச் சாலை, ஆய்க்குடி முருகன் கோயில் அனுமன் ஆறு அருகில் புதிதாக கிணறு அமைத்து குடிநீா் வழங்கும் திட்டம், கம்பிளி மகாலிங்கம் கோயில் செல்லும் சாலையில் தடுப்புச்சுவா் மற்றும் தாா்சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டப் பணிகளுக்கு

ரூ. 20.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com