ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

ரூ. 500-800 வரை விற்பனையாகி வந்த மல்லிகைப் பூ வியாழக்கிழமை ரூ. 250-300 ஆக குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மலா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஆலங்குளத்தில் உள்ள பூ கடைகள் மற்றும் ஆலங்குளம் வட்டம் சிவகாமியாபுரத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வா். உள்ளூா் தேவைக்கு போக அண்டை மாநிலமான கேரளத்திற்கு மலராகவும் மாலையாகவும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் மல்லிகைப் பூவின் விளைச்சல் அதிகரித்ததாலும் தற்போது முகூா்த்தங்கள் இல்லாததாலும் மல்லிகைப் பூவின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 250 முதல் ரூ. 300 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் மல்லிகை ரூ.500 முதல் ரூ. 800 வரை விற்பனையாகி வந்தது.

விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். அதே நேரம் ரூ. 20 க்கு மட்டுமே விற்பனையாக வேண்டிய கேந்தி மலா் ரூ. 80 க்கு விற்கப்படுவதால் கேந்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com