மக்கள் ஆதரவு இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை: சச்சின் பைலட்

மக்கள் ஆதரவு இல்லாமல் திட்டங்கள் சாத்தியமாகாது என்று ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை: சச்சின் பைலட்


மக்கள் ஆதரவு இல்லாமல் திட்டங்கள் சாத்தியமாகாது என்று ராஜஸ்தான் மாநிலத் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் இரண்டாவது நாளாக சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பங்கேற்றார். இதில், சச்சின் பைலட் பேசியதாவது:

"சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த 20, 30 ஆண்டுகளில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு என்பது உருவானது. பொதுவாக பொதுப் பட்டியலில்தான் பிரச்னை வரும். சட்டப்பூர்வமாக நடைபெற்றால் எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், ஒருபோதும் அப்படி நடக்காது.  

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலீடு மற்றும் வளங்களுக்காக ஒவ்வொரு மாநிலமும், ஒன்றோடு ஒன்று போட்டியிட வேண்டியிருக்கிறது. என்னுடைய பார்வையில் இது நல்ல விஷயம். இது நிறைய வாய்ப்புகளை உருவாக்கும்.

மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்குவதில் தடைகள் இருக்கும் என ஒவ்வொரு மாநில அரசும் அஞ்சுகின்றனர். மத்திய அரசிடம் இருந்து ரூ. 10,000 கோடி நிதிக்காக ராஜஸ்தான் அரசு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் எந்தவொரு மாநிலமும் மகிழ்ச்சியடைவதாக எனக்குத் தெரியவில்லை. 

ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல் தலைமை தீர்மானித்தால், அது சாத்தியமாகும். மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு திட்டமும் சாத்தியமாகாது. அவர்களது ஆதரவு இல்லாமல் திட்டங்கள் வெற்றியும் அடையாது. நமது மக்கள்தொகையில் பெரும்பாலும் மோசமான வறுமை நிலையே நிலவி வரும்போது, எப்படி அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும். கொள்கை உருவாக்கத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குழந்தை இறப்பு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நேர்மை இருந்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

நேர்மையான நடவடிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். கொள்கைகளில் பெரிதளவில் மாற்றங்கள் நிகழாதபோது, 5 ஆண்டுகளாக நான் முதல்வராக இருந்தேன், பிரதமராக இருந்தேன் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வெற்றிக்கு அரசு மற்றும் மக்களின் கூட்டு முயற்சியே மிக முக்கியம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com