நெருக்கடியில் நீதித்துறை: காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி

நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்


நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.  

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் கல்விச் சிந்தனை அரங்கு புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் இரண்டாவது நாள் அமர்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி பங்கேற்றார். அவர் பேசியதாவது: 

"தற்போது நிகழும் போராட்டங்கள் அரசியல் தலைவராலோ அல்லது அரசியல் கட்சியினாலோ நடத்தப்படுவது கிடையாது. இளம் மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். எழுச்சிகள் அடிமட்டத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்களே போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசு சட்டரீதியிலான முடிவுகளை எடுக்கும்போது, எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றும். தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டு 8 மாதங்கள் உள்ளன. எனவே, இதை தேர்தல் யுத்தியாக அணுகக் கூடாது. போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் பெரிதளவில் பங்கெடுக்கிறது. 

நீதித்துறையில் இரண்டு முக்கிய நெருக்கடிகள் உள்ளன. நாளுக்கு நாள் நீதித்துறை தனக்கான சுதந்திரத்தை இழந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். வெறும் சட்டங்களை மட்டும் படிப்பது போதாது. நேர்மையான நீதிபதிகள் அனைவரும் மனசாட்சிப்படியும் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் நீதித்துறை அமைப்பில் இருக்கும் மற்றுமொரு நெருக்கடி ஏழைகளுக்கான நீதி எட்டாக் கனியாக உள்ளது.

தில்லி பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி இந்தத் தேர்தலை அணுகக் கூடாது. ஷீலா தீட்சித் இருந்தபோது காங்கிரஸ் நல்லாட்சியையே வழங்கியது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com