கல்வியின் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவோம்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வியின் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.
கல்வியின் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவோம்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வியின் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், 'இளம் இந்தியாவுக்கான எனது பார்வை' என்ற தலைப்பில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், 'சத்தீஸ்கர் மாநிலம் தமிழ்நாட்டை விட பரப்பளவில் பெரிய மாநிலம். ஆனால் சத்தீஸ்கரின் மக்கள் தொகையைவிட தமிழ்நாட்டு மக்கள் தொகை அதிகம். சத்தீஸ்கரில் 44% நிலப்பகுதி காடுகளாக உள்ளன.

மக்கள் தொகையில் 32% பழங்குடியினர், 12-13% பேர் பட்டியலிடப்பட்டவர்கள், மற்றவர்கள் ஓ.பி.சி பிரிவினராக உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், சத்தீஸ்கரில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 36% முதல் 39% வரை உயர்ந்துள்ளது. சத்தீஸ்கரில் உள்ள மிகப்பெரிய பிரச்னை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை. எங்களது இலக்கு பெரிய கட்டிடங்களையும் சாலைகளையும் கட்டுவது அல்ல, ஆனால் சத்தீஸ்கர் மக்களின் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாருங்கள். 

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அதனை திறம்பட செய்ய முடிந்த ஒரே மாநிலம் சத்தீஸ்கர்தான். மேலும், எங்களது மாநிலத்தில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி 45%, ரியல் எஸ்டேட் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று மருத்துவத்துறையிலும் சத்தீஸ்கர் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. கல்வியின் தரத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

எங்கள் அரசாங்கத்தின் நோக்கம் அனைவருக்கும் கல்வி வழங்குவது மட்டுமல்லாமல், கல்வி மூலம் வளர்ச்சியை வழங்குவதும் ஆகும். நக்சல் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுடன் பல விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.

மாறாக கல்வியின் மூலம் வளர்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறோம். பள்ளிகள் இல்லாத இடங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறோம்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com