'கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை'

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், 'அரசு கல்வி நிறுவனங்களை செயல்படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
'கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை'

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், 'அரசு கல்வி நிறுவனங்களை செயல்பட வைப்பது எப்படி?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஆந்திரப் பிரதேச பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையர் சந்தியா ராணி, திரைப்பட இயக்குநர் மற்றும் கல்வியாளர் ரேவதி ராதாகிருஷ்ணன், கேம்ப் டயரிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மிலிந்த் சந்த்வானி, தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் தொடக்கத்தில் பேசிய ரேவதி ராதாகிருஷ்ணன்,

"மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவில் 8 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், 1.5 லட்சம் பேருக்கு மட்டுமே சாதிச் சான்றிதழ்கள் உள்ளன.

எனது திரைப்படத் தயாரிப்பை விட்டுவிட்டு 'வானவில்' என்ற பள்ளியைத் தொடங்கினேன். நாங்கள் எங்கள் பள்ளியில் நிறைய நாடகங்களையும், கலைகளையும் கற்பிக்கிறோம். இதன்மூலமே எங்கள் பாடத்திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுதந்திரமாக இயங்க வாய்ப்புகள் வழங்குகிறோம். இவர்கள் அதிக விமரிசனங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் இவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமலே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே எங்களது பாடத்திட்டத்தை உருவாக்குகிறோம்" என்றார்.

மிலிந்த் சந்த்வானி பேசுகையில்,

"நாட்டில் உதவிகள் தேவைப்படும் பல மாணவர்கள் உள்ளனர். எனவே, அதற்கான மாற்றத்தை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். எங்களது நிறுவனத்தின் கீழ் 9 நகரங்களில் தன்னார்வ கல்வி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக குழந்தைகள் அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களும் பல்வேறு குழந்தைகளுக்கு உதவ முன்வருகின்றனர். இது கல்வியில் ஒரு மாற்றமாகவே நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக,  ஆந்திரப் பிரதேசத்தின் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையர் சந்தியா ராணி பேசுகையில்,

"அரசுப் பள்ளிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்று யோசிப்பதற்குப் பதிலாக, பள்ளிகளை எவ்வாறு குழந்தைகளுக்காகச் செயல்படுத்துவது என்றே சிந்திக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவாரசியமான தனிக்கதை ஒன்று உள்ளது. பள்ளி வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளன. கல்வி கற்பதற்காக தொலைதூரப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். 

தில்லி அரசு 25% பட்ஜெட்டை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க ராஜஸ்தான் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற கருத்து  உள்ளது. இரண்டு வகையான பள்ளிகளும் தேவை என்று நான் நினைக்கிறேன். இரண்டிற்குமே பல சவால்கள் உள்ளன. கல்விக்கென அரசு அதிகளவில் பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலீடு அதிகம் தேவை. இதற்கு எடுத்துக்காட்டாக தில்லி அரசு கல்விக்கு 25% பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. எவ்வாறாயினும், பல அரசியல் நிர்பந்தங்கள் கல்வித் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. கல்வியை "குழந்தை மையமாக" மாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

இதையடுத்து, மங்கத் ராம் ஷர்மா பேசுகையில்,

"கல்விக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.  அரசாங்கமானது தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி, அவை உயர் தொழில்நுட்பக் கல்வியுடன் பணிபுரிய வைக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வார இறுதியில் சமூகப் பிரச்னைகள் மற்றும் பள்ளி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு ஆசிரியர்களுக்கு உதவும். பள்ளிகல்வித் துறையை மாவட்ட அளவில் மற்ற அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைத்துள்ளோம். கல்வித்துறையில் தமிழகம் அதிகபட்ச அளவை அடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com