"ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு தாராளமயக் கல்வி": கஸ்தூரிரங்கன் பேச்சு

தாராளமயக் கல்வியானது ஒருபுறம் ஆக்கபூர்வமான மற்றும் கலை ரீதியான வளர்ச்சிக்காகவும், மறுபுறம் பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்கவும் உதவுகின்றன என கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டார்.
"ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு தாராளமயக் கல்வி": கஸ்தூரிரங்கன் பேச்சு


தாராளமயக் கல்வியானது ஒருபுறம் ஆக்கபூர்வமான மற்றும் கலை ரீதியான வளர்ச்சிக்காகவும், மறுபுறம் பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்கவும் உதவுகின்றன என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டார்.

சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் முதல் அமர்வில் கஸ்தூரிரங்கன் பேசினார். 
கல்விக் கொள்கை வரைவினை உருவாக்க இரண்டு ஆண்டு காலங்கள் ஆனது என்று கூறிய கஸ்தூரிரங்கன், கல்விக் கொள்கை வரைவில் உள்ள அம்சங்கள் குறித்து விவரித்தார்.

"பல தரப்பிலிருந்தும் கல்விக்  கொள்கை குறித்த அறிவுரைகள் வந்துகொண்டே இருந்தன. தற்போதுள்ள வளர்ச்சி நிலையில் 20 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு ஒரு கல்விக் கொள்கையினைக் கொண்டு வர முடியுமா என்ற சவாலுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக் கல்விக் கொள்கையானது பள்ளிக் கல்வியை ஐந்து நிலைப் படிகளாகக் கொண்டு முன்மொழியப்பட்டது. 

இக்கொள்கையை வடிவமைக்க நாங்கள் புள்ளிவிவரங்கள் கூறுவதை  மட்டும் எடுக்கவில்லை. இதனை உருவாக்குவதற்கு அனைத்துப் பகுதிகளையும் புரிந்துகொள்வதற்கான அறிவியல் முறைகளையும் ஆராய்ந்துள்ளோம். 86 சதவிகித மூளை வளர்ச்சி என்பது 6 வயதுக்குள் உருவாகிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்ற அவர், "5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி நாம் பேசினால், கல்வியை ஆதரிக்க முடியும். தாராளமயக் கல்வியானது ஒருபுறம் ஆக்கபூர்வமான மற்றும் கலை ரீதியான வளர்ச்சிக்காகவும், மறுபுறம் பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்கவும் உதவுகின்றன.

ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைப் பொருத்தவரை தற்போது பல்கலைக்கழக அமைப்பு பரிதாபகரமான நிலையில் உள்ளது. அறிவியல், கலை மற்றும் மனிதநேயங்களுக்கான நிதியுதவியுடன் அதிக அதிகாரம் பெற்ற அமைப்பை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com