தற்போதைய சமுதாயத்திற்கு விளையாட்டு கலாசாரம் அவசியம்: கிரண் ரிஜ்ஜு பேச்சு

தற்போதைய சமுதாயத்திற்கு விளையாட்டு கலாச்சாரம் அவசியம் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார். 
தற்போதைய சமுதாயத்திற்கு விளையாட்டு கலாசாரம் அவசியம்: கிரண் ரிஜ்ஜு பேச்சு

தற்போதைய சமுதாயத்திற்கு விளையாட்டு கலாசாரம் அவசியம் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கில் மத்திய இளையோர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், 'இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால் அதன் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான். ஒரு செயலை செய்வதற்கான திறன் வேண்டும். இந்தியா ஒரு இளம் நாடு. இங்கு உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை உள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கிற்கான ஒரு பணிக்குழுவை பிரதமர் அறிமுகப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2020 மற்றும் 2024 ஒலிம்பிக்ஸில் நமது இளைஞர்கள் சாதிப்பார்கள். 

ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்கில் இந்தியாவின் உண்மையான திறன் உலகிற்கு எடுத்துரைக்கப்படும். முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வரும். இதனை ஒரு வாக்குறுதியாகவே எடுத்துக்கொள்ளலாம். 

இந்தியாவில் 70% பேர் எந்த உடற்பயிற்சி பயிற்சியும் செய்வதில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிக பதக்கங்களை வெல்வது மக்களில் நம்பிக்கையையும் மிகப்பெரிய ஆற்றலையும் தருகிறது.

தற்போதைய சமுதாயத்திற்கு விளையாட்டு கலாசாரம் அவசியம். சமுதாயத்தில் விளையாட்டு கலாசாரம் இல்லையென்றால், எவ்வாறு சாம்பியன்களை உருவாக்க முடியும். அதே நேரத்தில் விளையாட்டு கலாசாரம் பார்வைக்கு பார்வை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மாற்றம் அவசியமாகும்.

ஃபிட் இந்தியாவில் பல விஷயங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் விளையாட்டு வீரர்களை போட்டியின்போது நேரில் வந்து ஊக்குவிக்கும்போது அவர்களுக்கு ஒரு ஊக்கத்தைத் தருவதோடு, அரசுக்கு ஒரு வருவாயும் கிடைக்கிறது. நீங்கள் படித்தால் ஒரு நல்ல மனிதராகிவிடுவீர்கள். நீங்கள் விளையாடினால் ஒரு நட்சத்திரமாகி விடுவீர்கள். இந்தியாவில் அந்த மாற்றத்தை நாம் காணப்போகிறோம். சாகசம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. நாங்கள் ஒரு புதிய சாகசக் கொள்கையை உருவாக்க முயற்சிக்கிறோம். அது நன்றாக வெளிவர வேண்டும்.

இந்தியாவின் வடகிழக்கைப் பார்க்கும் விதத்தில் பெரும்பாலானோருக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது. நீங்கள் அரசியல் எல்லையை அகற்றிப் பார்த்தால், ஆசியாவின் நீட்சி வட கிழக்கு இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. வடகிழக்கு எம்.பிக்கள் பேசுவதில்லை என்ற பொதுவான தவறான புரிதல் உள்ளது. வடகிழக்கை நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக மாற்றுவதற்கான ஒரு அடித்தளமாக கிழக்கு நோக்கிய கொள்கை(Look East Policy) இருக்கும். பல இடங்களில் நீர் பற்றாக்குறை இருந்தாலும் இது ஆசிர்வதிக்கப்பட்ட நிலம். மக்கள் வடகிழக்கு மாநிலங்களை பார்க்கும் விதத்தை மாற்ற வேண்டும். வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்ற முயற்சிக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com