'மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை' - வெங்கைய நாயுடு பேச்சு

கல்வியைப் பொருத்தவரை மொழித் திணிப்பும் இல்லை, மொழி எதிர்ப்பும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குறிப்பிட்டார். 
'மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை' - வெங்கைய நாயுடு பேச்சு

கல்வியைப் பொருத்தவரை மொழித் திணிப்பும் இல்லை, மொழி எதிர்ப்பும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குறிப்பிட்டார். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குத்துவிளக்கேற்றி  கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் தேசிய  கல்விக்கொள்கை குறித்தும் வெங்கைய நாயுடு பேசியதாவது: 

கரோனா சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆன்லைன்வழிக் கல்வி சாத்தியமானது. எனினும் கரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்கள் சிலர் கல்வி பெற கடினமான சூழ்நிலை உருவானது. எனினும் தொழில்நுட்பம் இல்லையென்றால் கல்வி சாத்தியமாயிருக்காது. கரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக தொடர்புகொள்ள தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியமானது.

இன்று உலக மகளிர் தினம். நாட்டின் மக்கள்தொகையில் 50% பேர் பெண்கள். ஆனால், பெண்களுக்கு இத்தனை ஆண்டுகளாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் முன்னேற்றம் தேவை.  நாட்டின் வளர்ச்சிக்காக சாதி, மத, இன பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். 

கல்வி அவரவர்களுக்கு விருப்பமான மொழியில் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

நானும் கிராமப்புறத்தில் இருந்து வந்தவன். தாய்மொழியில்தான் கல்வி பயின்றேன். ஆனால், அதற்காக பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றில்லை. பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது வளர்ச்சிக்கு உதவும். 

என்னைப் பொருத்தவரை மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. 

தேசிய கல்வி கொள்கை, கல்வித்துறையை மறுகட்டமைக்கவும் திறன்கல்வியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பு அளிக்கவும் வலுவான வளமான கல்வியை அளிக்கவும் கொண்டு வரப்பட்டது. 

கல்வி வளர்ச்சிக்கு இளைஞர்களுக்கான திறன்களை அதிகரிக்க வேண்டும். 

மேலும் கல்வியில் ஆய்வு என்பது அவசியமானது. ஆய்வின் மூலமாக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். தனிப்பட்ட மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிகள் தேவை. 

கல்வி என்பது தொலைநோக்கு. இந்த தேசத்தை வலுப்படுத்த கல்வி அவசியம். அதனை சரியான முறையில் சரியான நேரத்தில் பெற வேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார் வெங்கைய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com