போரில் சீனாவைத் தோற்கடிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

போரில் சீனாவைத் தோற்கடிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கல்விச் சிந்தனை அரங்கில் பேசினார்.
போரில் சீனாவைத் தோற்கடிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

போரில் சீனாவைத் தோற்கடிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கல்விச் சிந்தனை அரங்கில் பேசினார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

சீன மாடலை இந்தியாவால் பிடிக்க முடியுமா? என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது:

ஜனநாயம் மிகவும் மதிக்கத்தக்கது. வெளிப்படையாக பேசுவதற்கு களத்தில் நாம் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டும். 

நாம் சமஸ்கிருதத்தை புத்துணர்வு பெறச் செய்ய வேண்டும். மேற்குப் பகுதிகளில் இதை செய்து வருகின்றனர். தமிழில் 40 சதவிகிதம் சொற்கள் சமஸ்கிருதத்தில் இருப்பவை ஆகும். வரலாறு மற்றும் மதம் குறித்து தற்போதைய வகுப்புகளில் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அனைத்தும் குப்பைகளாகும்.

தற்போதைய சூழலில் நாம் முக்கியமாக செய்ய வேண்டியது, போரில் சீனாவை தோற்கடிக்க வேண்டும். அது நடந்தால் உலக நாடுகள் நமக்கு ஆதரவளிக்கும்.

என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றி, அதன் விளைவுகளை மோடி எதிர்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரம் குறித்து பேசுகையில், பெரிய பீரங்கியும் வீட்டோ அதிகாரத்தையும் கொண்டு வல்லரசு போர்த் தொடுத்துள்ளது. உலக நாடுகள் இதை எதிர்க்க வேண்டும்.  

இந்தியா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸின் கூட்டம் தில்லியில் நடைபெறும்போது யாரேனும் ஆயுதம் உபயோகித்தால் குற்றச் செயல் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விவகாரத்தில் நாம் நடுநிலையாக இருப்பதால், ஒட்டுமொத்த நாடும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்றார்.

முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குத்துவிளக்கேற்றி  கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com