ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி: கேரள ஆளுநர்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கல்விச் சிந்தனை அரங்கில் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி என்று விமர்சித்தார்.
ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி: கேரள ஆளுநர்


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கல்விச் சிந்தனை அரங்கில் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி என்று விமர்சித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அமர்வுடன் தொடங்கியது. இந்த அமர்வில் "கல்வி: அடையாளங்களின் பலி" என்ற தலைப்பில் அவர் விரிவாகப் பேசினார்.

ஆளுநர் பேசியதாவது:

"பண்டை காலங்களிலிருந்தே நம் முனிவர்கள் பன்முகத்தன்மையை இயற்கையின் நியதியாகவே பார்த்து வந்துள்ளனர். பன்முகத்தன்மை என்பது வலிமைக்கான ஆதாரம். பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் காண்பதுதான் அறிவாற்றல் என்கிறார் விவேகானந்தர்.

இந்திய நாகரிகம் என்பது ஆத்மாவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுவே இந்திய சமுதாயத்தின் சிந்தனை. ஆத்மா என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. விலங்குகள் உள்பட அனைத்து உயிரினங்களையும் அது உள்ளடக்கியது.

ஆனால், சமீபத்திய வரலாறுகள் மிகவும் வேதனையளிக்கின்றன. கல்வி நிறுவனங்கள் சீருடை விதிகளை விதிக்கலாம். கர்நாடக ஹிஜாப் விவகாரம் சர்ச்சை அல்ல, சதி. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்துபவர்கள், மதத்தின் அடிப்படையிலான அடையாளங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துவார்கள்.

முத்தலாக்கிற்கு 2017-இல் உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், மாநிலங்களவையிலுள்ள எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2019-இல்தான் அது சட்டமாக்கப்பட்டது. விவாகரத்து விகிதம் 19 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது உண்மைத் தரவுகள். முஸ்லிம் பெண்கள் விடுதலையடைந்ததைப்போல உணர்கின்றனர்.

இந்த சதிகளின் நோக்கமே பெண்களை முடக்க வேண்டும் என்பதுதான். கல்வி மட்டுமே புதிய பாதையை வகுக்கும். பெண்களை மீண்டும் நான்கு சுவற்றுக்குள் அடைக்க அவர்கள் முனைவார்கள். 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு நேரும் இவற்றை நாம் அனுமதிக்கலாமா?

அடையாளங்களுக்குக் கல்வி பலியாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அறிவாற்றலின் கூடம்தான் இந்தியா. வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கு வரும் மாணவர்கள் நம் நாட்டின் கலாசாரத்தைப் பயிலாமல் அவரவர் நாட்டின் கலாசாரம் மற்றும் மரபைப் பயில்கின்றனர். இதுதான் இந்தியாவின் பண்பு" என்றார் ஆரிஃப் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com