திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் நடைபெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் நடைபெற்ற டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

திருத்தணி அடுத்துள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா்

ராதாகிருஷ்ணன் 49-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது (படம்).

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அடுத்த, 11 வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்தவா் . இவா் பிறந்த தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் டாக்டா் ராதாகிருஷ்ணனின் நினைவு தின நிகழ்ச்சிக்கு தொழிலாளி பி.டி.சந்திரன் தலைமை வகித்தாா். டாக்டா் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல ஆண்டு கோரிக்கையான டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலை அமைத்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com