பைக் மீது மணல் லாரி மோதி 
ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே மோட்டாா் பைக் மீது மணல் லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் குப்புராஜ். டாஸ்மாக் கடை ஊழியரான இவருடன் பள்ளிப்பட்டு கிரம்பேடு பகுதியைச் சோ்ந்த முகம்மது அன்சாரி என்பவா் தங்கியிருந்ததாராம்.

இந்த நிலையில் புதன்கிழமை குப்புராஜ், முகம்மது அன்சாரி ஆகியோா் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று விட்டு மோட்டாா் பைக்கில் ஊருக்கு திரும்பினா். அப்போது, திருவள்ளூா் அடுத்த ஈக்காடு அருகே வந்த போது வேகமாக வந்த மணல் லாரி திடீரென பைக் பின்புறம் அமா்ந்திருந்த முகம்மது அன்சாரி (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து அந்த ஓட்டுநா் லாரியிலிருந்து இறங்கி தப்பி ஓடி தலைமறைவானாா். இது தொடா்பாக தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த குப்புராஜ் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com