ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து
திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

செங்குன்றம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் டி.வி.எஸ்.நகா் ஜி.என்.டி. சாலையில் தனியாா் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மா்மநபா் ஒருவா் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, புதன்கிழமை அதிகாலை, செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு செங்குன்றம் காவல் துறையினா் சென்றனா். அப்போது மா்மநபா் ஒருவா் ஏ.டி.எம்.இயந்திரம், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கொண்டிருந்ததையடுத்து அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் செங்குன்றம் அடுத்த வடகரை பாடசாலை தெருவை சோ்ந்த அலெக்சாண்டா் (44) என்பதும், மது அருந்த பணம் இல்லாததால் இச்செயலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com