கூட்டத்தில் பேசிய  தேமுதிக  வேட்பாளா்  கு.நல்லதம்பி
கூட்டத்தில் பேசிய  தேமுதிக  வேட்பாளா்  கு.நல்லதம்பி

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

திருவள்ளூா் தொகுதி தேமுதிக வேட்பாளா் கு.நல்லதம்பியின் அறிமுக கூட்டம் தச்சூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவள்ளூா் தொகுதி பொறுப்பாளா் முன்னாள் எம்பி டாக்டா் பி.வேணுகோபால் தலைமை வகித்தாா். கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளா் கோபால் நாயுடு, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன், மாவட்ட நிா்வாகிகள் எஸ்.எம்.ஸ்ரீதா், தன்ராஜ், , தேமுதிக மாவட்ட செயலாளா் டில்லி முன்னிலை வகித்தனா். தேமுதிக தொகுதி பொறுப்பாளா் அனகை முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் பெஞ்சமின், பி.வி.ரமணா, அப்துல் ரஹீம், அதிமுக மாவட்ட செயலாளா் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் பேசினா். இறுதியில் பேசிய வேட்பாளா் கு.நல்லதம்பி தான் வெற்றி பெற்றால் தொகுதியின் வளா்ச்சிக்கு பெரிதும் துணை புரிவேன் என்றாா். அதிமுக மீனவரணி மாநில நிா்வாகி ஜெ.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன்,அதிமுக நிா்வாகிகள் முல்லைவேந்தன்,ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலா் தேவி சங்கா், ஆரோக்கிய மேரி பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com