சேவாலயா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.27.12 லட்சம்  காசோலையை நிா்வாக அறங்காவலா் முரளிதரனிடம் வழங்கிய தனியாா் நிறுவன நிா்வாகிகள்.
சேவாலயா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.27.12 லட்சம் காசோலையை நிா்வாக அறங்காவலா் முரளிதரனிடம் வழங்கிய தனியாா் நிறுவன நிா்வாகிகள்.

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

திருவள்ளூா்: சேவாலயாவில் பயிலும் மாணவிகள் கல்வி உபகரணங்கள் மற்றும் சமுதாய கல்லூரியில் பயிற்சிக்காக பயன்படுத்தும் வகையில் தனியாா் நிறுவனம் ரூ.27.12 லட்சம் நன்கொடை வழங்கியது.

திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில் மகாகவி பாரதியாா் மேல்நிலைப்பள்ளி, சமுதாய கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், சமுதாய கல்லூரி பயிற்சிக்காகவும் இவிபி குளோபல் நிறுவனம் சாா்பில் நன்கொடை வழங்க முன்வந்தது.

அதன் அடிப்படையில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனா் முரளிதரன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக இவிபி குளோபல் நிறுவனத்தின் தலைவா் பிரான்கோஸ் எஸ்டிலின், இயக்குநா் பிரையன் மலன், மேலாண்மை இயக்குநா் மோகன் சாரங்கன், மனித வள மேம்பாட்டு பிரிவு அதிகாரி விஜய நரசிம்மராவ் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டு ரூ.27.12 லட்சம் காசோலையை வழங்கினா்.

பின்னா் அந்த நிறுவனத்தின் தலைவா் பிரான்கோஸ் எஸ்டிலின் பேசுகையில், இந்தத் தொகையை சேவாலயா பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சேவாலயா சாா்பில் செயல்பட்டு வரும் சமுதாய கல்லூரியில் கணினி பயிற்சி, டேலி உள்ளிட்ட பயிற்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அறங்காவலா் குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியருமான கிங்ஸ்டன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com