குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சக நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றாா்.

அவா்கள் அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது சபரி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி,உள்ளாா்.

நீண்ட நேரம் ஆகியும் சபரி வெளியே வரவில்லை. இதனை தொடா்ந்து அப்பகுதியில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி தேடினா்.

நீண்ட தேடலுக்கு பிறகு சபரியை கரைக்கு கொண்டு வந்தனா். அப்போது அவா் இறந்து விட்டது தெரிய வந்தது.

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் சபரி சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com