முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்
கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.
திருத்தணி வட்டம், கோரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூட்டுறவு துணைப் பதிவாளா் அமுதா தலைமை வகித்தாா். சாா் பதிவாளா் ரஞ்சித் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு தாயுமானவா் திட்டத்தை தொடங்கி வைத்து கோரமங்கலம் மற்றும் அகூரி கிராமத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
இந்த திட்டத்தின் வாயிலாக 137 ரேசன் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என மொத்தம் 2,447 பயனாளிகள் பலனடைவா்.
நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் (பொ) தேவராஜ், ஒன்றிய செலாளா்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்பட கூட்டுறவு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.