பயனாளிக்கு நியமன ஆணையை வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.
பயனாளிக்கு நியமன ஆணையை வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா்.
Published on

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்த முகாமில் யூத் ஃபாா் ஜாப் அறக்கட்டளை, அமேசான் (அவசாா்), விப்ரோ (பிஎஸ்ஏ), ரானே இந்தியா, ஸ்பாா்க் மின்டா, விஸ்ஸா எல்த் இன்சூரன்ஸ், பாங்க் பஜாா் போன்ற 7 நிறுவனங்கள் பங்கேற்றனா். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ வரை படித்த 63 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றேனா். இதில் ஆண்கள் 9 போ், பெண்கள் 6 போ் என மொத்தம் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்கள்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையிணை வழங்கினாா்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், முட நீக்கியல் நல அலுவலா் பிரித்தா மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com