கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே தொழில்நுட்பம்

கூகுளின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட் போன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே தொழில்நுட்பம்

கூகுளின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட் போன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டிப்ஸ்டர் ஆன்லீக்ஸ் மற்றும் 91 மொபைல்கள் வெளியிட்ட தகவலின்படி, விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் கூகுள் பிக்சல் 4ஏ, பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. 

கூகுள் தயாரிப்புகளில் பட்ஜெட் வாரிசு என்று அழைக்கப்படுவது பிக்சல் 3ஏ. இதன் அடுத்த வெர்ஷனாக பிக்சல் 4ஏ பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பிக்சல் 4ஏவில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

இதன் பின்புறத்தில் ஒற்றை கேமரா சென்சார் இருக்க வாய்ப்புள்ளது. பிக்சல் 4ஏ-வின் 5.7- அல்லது 5.8-இன்ச் டிஸ்ப்ளே போன்களில் கேமரா சென்சாருக்கான பஞ்ச்-ஹோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முந்தைய வெர்ஷன் பிக்சல் 3ஏ உடன் ஒப்பிடும்போது 4ஏ மிகவும் மெலிதாகத் தோன்றும்.

இதன் அம்சங்கள் பின்வருமாறு:

4ஜிபி ரேம் + 64ஜிபி
ப்ரோசிஸோர்குவால்‌காம் ஸ்னாப்ட்ராகன் 730
டிஸ்பிளே 5.7 இன்ச் அல்லது 5.8 இன்ச்
கேமரா பிரைமரி 12.2 எம்.பி + 8 எம்.பி
முன்பக்க கேமரா 8 எம். பி
பேட்டரி 3900mAh
ஆண்ட்ராய்டு வி10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
 டூயல் சிம் கார்டுகள்: ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்
நெட்ஒர்க்:  4 ஜி தொழில்நுட்பம் 
வாட்டர்ப்ரூப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com