மிகச்சிறந்த வடிவமைப்புடன் கூடிய ரெட்மிபுக் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் லேப்டாப் ரெட்மிபுக் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மிகச்சிறந்த வடிவமைப்புடன் கூடிய ரெட்மிபுக் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி நிறுவனம், ரெட்மிபுக் 13 என்ற புதிய லேப்டாப் மாடலை கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்தது. மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த சாதனம் சில்வர் நிறத்தில் அறிமுகமானது. 

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் லேப்டாப் ரெட்மிபுக் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், 13 அங்குல மாடல் அல்லது 14 அங்குல மாடல் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி புக் 13 சிறிய 13.3 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே 10-வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில், கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7  என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை முறையே சுமார் ரூ.42,000 மற்றும் ரூ.52,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டுள்ளது. 

மேலும், இந்நிறுவனம் வெப்ப மேலாண்மை முறையை (proprietary thermal management system) ரெட்மிபுக் 13 லேப்டாப்பில் பயன்படுத்தியுள்ளது, அதன்படி இதில் 6மிமீ விட்டம் கொண்ட டூயல் ஹீட் பைப்கள் உள்ளன. 

இதுவரை இல்லாத அளவுக்கு ரெட்மிபுக் லேப்டாப் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com