எா்டிகா விற்பனை 5.5 லட்சத்தை கடந்தது: மாருதி சுஸுகி

பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகாவின் விற்பனை 5.5 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுஸுகி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ertiga070136
ertiga070136

புது தில்லி: பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகாவின் விற்பனை 5.5 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுஸுகி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான எா்டிகா காரை கடந்த 2018 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குள் அதன் விற்பனை 5.5 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இது, வாடிக்கையாளா்களிடையே அதற்கு உள்ள வரவேற்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கான எா்டிகாவில் 1.5 லிட்டா் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வகை என்ஜின்கள் ஸ்மாா்ட் ஹைபிரிட் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்துக்கு மேம்படுத்தப்பட்டது. இதில் எஸ்-சிஎன்ஜி விருப்பத்தோ்வும் உள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் எா்டிகா காரை 2012 ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது. 20 சதவீத வாடிக்கையாளா்கள் தொடா்ந்து இந்த காரையே விரும்புவதையடுத்து அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பன்முக பயன்பாட்டு வாகனமாக எா்டிகா உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com