நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கிறது எல் & டி நிறுவனம்

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது.
நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கிறது எல் & டி நிறுவனம்

புது தில்லி: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:

அஸ்ஸôமின் துப்ரி பகுதியையும், மேகாலயத்தின் புல்பாரி பகுதியையும் இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமையவிருக்கும் பால கட்டுமான ஒப்பந்தம் எல் அண்ட் டியின் துணை நிறுவனமான எல் அண்ட் டி கட்டுமான நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

ரூ.2,500 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாலம் மொத்தம் 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

தற்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் 250 கிலோ மீட்டராகவும், பயண நேரம் 2 மணி நேரம் 50 நிமிடங்களாகவும் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 127 பி வழியாக அமையும் இந்தப் பாலம் துப்ரி பகுதியில் 3.5 கி.மீ.க்கு அணுகு சாலையையும், புல்பாரி பகுதியில் 2.2 கி.மீ.க்கு அணுகு சாலையையும் கொண்டிருக்கும்.

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற மாநிலங்களுடன் இணைக்கக் கூடிய இந்தப் பாலம், தேசிய முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும்.

இந்தப் பாலம் வடகிழக்கில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியை எளிதாக அணுகுவதற்கான முக்கியமான பாதையாக இருக்கும் என்பதுடன் அஸ்ஸôம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் தொழில், வர்த்தக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் (பொது கட்டுமானம்) இயக்குநரும், முதுநிலை துணைத் தலைவருமான எஸ்.வி.தேசாய், இந்தப் பணி எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com