2028ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீனா முந்தும்

2028 ஆம் ஆண்டுக்குள்ளாகவே சீனா அமெரிக்காவின் பொருளாதாரத்தை முந்தி உலகின் முன்னணி பொருளாதார நாடாக உருவெடுக்கும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தும் சீனா
2028ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தும் சீனா

2028 ஆம் ஆண்டுக்குள்ளாகவே சீனா அமெரிக்காவின் பொருளாதாரத்தை முந்தி உலகின் முன்னணி பொருளாதார நாடாக உருவெடுக்கும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. வர்த்தக உலகில் இரு நாடுகளுக்குமிடையே கடந்த சில வருடங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2028ஆம் ஆண்டில் சீனா அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் எனத் தெரிவித்துள்ளது.

இது முன்பு கணிக்கப்பட்டதை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சீனா இத்தகைய நிலையை அடையும் எனத் தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தை சிறப்பாகக் கையாண்டதன் காரணமாக சீனாவின் ஒப்பீட்டு பொருளாதார செயல்திறன் மேம்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

2021 முதல் 2025 ஆண்டு வரையிலான காலத்தில் 5.7% சராசரி பொருளாதார வளர்ச்சியை சீனா அடையும் எனவும் அமெரிக்காவின் 1.9% சராசரி பொருளாதார வளர்ச்சியையும் அடையும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com