Enable Javscript for better performance
மிகச்சிறந்த வடிவமைப்புடன் கூடிய ரெட்மிபுக் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    மிகச்சிறந்த வடிவமைப்புடன் கூடிய ரெட்மிபுக் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

    By DIN  |   Published on : 13th February 2020 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    remibook

     

    ரெட்மி நிறுவனம், ரெட்மிபுக் 13 என்ற புதிய லேப்டாப் மாடலை கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்தது. மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த சாதனம் சில்வர் நிறத்தில் அறிமுகமானது. 

    இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் லேப்டாப் ரெட்மிபுக் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதில், 13 அங்குல மாடல் அல்லது 14 அங்குல மாடல் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி புக் 13 சிறிய 13.3 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே 10-வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில், கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7  என இரண்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை முறையே சுமார் ரூ.42,000 மற்றும் ரூ.52,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டுள்ளது. 

    மேலும், இந்நிறுவனம் வெப்ப மேலாண்மை முறையை (proprietary thermal management system) ரெட்மிபுக் 13 லேப்டாப்பில் பயன்படுத்தியுள்ளது, அதன்படி இதில் 6மிமீ விட்டம் கொண்ட டூயல் ஹீட் பைப்கள் உள்ளன. 

    இதுவரை இல்லாத அளவுக்கு ரெட்மிபுக் லேப்டாப் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    TAGS
    Redmibook
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai