ஆப்பிளைவிட 4 மடங்கு அதிகம் செலவிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்! எதற்காகத் தெரியுமா?

2019ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனம் 4 மடங்கு அதிகமாக டிவி விளம்பரத்திற்கு செலவிட்டுள்ளது.
ஆப்பிளைவிட 4 மடங்கு அதிகம் செலவிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்! எதற்காகத் தெரியுமா?

2019ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தைவிட மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவி விளம்பரத்திற்காக 4 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐஸ்பாட்.டிவி(iSpot.tv) என்ற நிறுவனம் சமீபத்தில் டிவி விளம்பரம் குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் கடந்த ஆண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப செலவினர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் பிராண்ட், அமெரிக்காவில் டிவி விளம்பரத்திற்கென அதிகம் செலவிட்டுள்ளது. இது ஆப்பிள் ஐபேடு விளம்பரத்தைவிட 4 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் டிவி விளம்பரங்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 219.1 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாக பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும், இது ஆண்டுக்கு 18.76 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபேடிற்காக மொத்தம் 49.1 மில்லியன் டாலர்களை செலவளித்துள்ளது என்றும் கூறியுள்ளது. 

ஆப்பிள் ஆண்டுக்கு 3 விளம்பரங்களை மட்டுமே இயக்கி ஒளிபரப்பியது. அதில், ஒன்று ஜனவரி மாதத்தில் ஆங்கிலத்திலும், இரண்டாவது நவம்பர் மாதத்தில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் இருந்தது. மொத்தம் 1.18 பில்லியன் பதிவுகள் உருவாகியுள்ளது. 

ஆனால், மைக்ரோசாஃப்ட் 23 விளம்பர இடங்களை வெளியிட்டது. இது 9.06 பில்லியன் பதிவுகளை உருவாக்கியது. என்.எப்.எல் கால்பந்து, என்.பி.ஏ ஹாக்கி மற்றும் என்.ஹெச்.எல் ஹாக்கி ஆகியவற்றின்போது அதிகமாக இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com