சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பான ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 10 லைட்டின் விலையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் வருகிற ஜனவரி 23 முதல் ஃபிளிப்கார்ட்டில் இதனை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம் என்றும் அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சீனத் தயாரிப்பான ஒன் பிளஸுக்கு சந்தையில் கடுமையான போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் மற்றும் நோட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சாம்சங் கேலக்ஸி எஸ் 10 லைட்டின் விற்பனையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேலக்ஸி எஸ்10 லைட்டில் 48 எம்.பி பிரதான கேமரா, 12 எம்.பி 'அல்ட்ரா வைட்' மற்றும் 5 எம்.பி 'மேக்ரோ' சென்சார்கள் புதிய ஓ.ஐ.எஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)' உடன் இருக்கும். 32 எம்.பி செல்பி கேமராவைக் கொண்டிருக்கும்.

6.7 இன்ச், எட்ஜ்-டூ-எட்ஜ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 4,500 mAh பேட்டரி மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட சாம்சங்கின் பல்வேறு அம்சங்கள்உள்ளன.

முன்னதாக, சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனுடன் இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. கேலக்ஸி நோட் 10 லைட், .70 அங்குல தொடுதிரை காட்சியுடன் 1080x2400 பிக்சல்கள், இது 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஐ இயங்குதளம் மற்றும் 4500 mAh பேட்டரி . பின்புறத்தில் 12 எம்.பி முதன்மை கேமரா, இரண்டாம் நிலை 12 எம்.பி கேமரா மற்றும் மூன்றாவது 12 எம்.பி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com