உங்கள் கூகுள் பே செயலியை பாதுகாக்க சில டிப்ஸ்

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பண வர்த்தனைகளுக்காக கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லதுதான்.
உங்கள் கூகுள் பே செயலியை பாதுகாக்க சில டிப்ஸ்

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பண வர்த்தனைகளுக்காக கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால் சைபர் குற்றங்கள் பெருகிவிட்ட நிலையில், உங்கள் பணம் பத்திரமாக இருப்பது மிகவும் முக்கியம். ஜி பே என்று சுருக்கமாக அழைக்கப்படும் குகூள் பே செயலியை பத்திரமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸை கூகுள் பரிந்துரைக்கிறது

  • உங்கள் யூபிஐ பின் நம்பரை (UPI PIN) மிகவும் ரகசியமாக வைத்திருங்கள். யாருடனும் இதைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
  • நம்பகமான செயலிகள் மட்டுமே பதிவிறக்கவும்
  • தீங்கு விளைவிக்கும் செயலிகள் என சந்தேகம் இருந்தால், அது என்னவென்று கூகுளில் நீங்கள் பரிசோதித்து, பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே பயன்படுத்தவேண்டும். 
  • இணையம் வழியாக உங்களுக்கு அனுப்பப்பட்ட வலைத்தளங்கள் அல்லது படிவங்களில் பூர்த்தி செய்யும்போது உங்கள்யூபிஐ பின் நம்பரைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள்.  
  • உங்கள் யூபிஐ பின் நம்பரை உள்ளிடுவது என்பது நீங்கள் ஒருவருக்கு பணம் செலுத்தும் போது மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணத்தைப் பெற உங்கள் யூபிஐ பின் நம்பரை உள்ளிட தேவையில்லை.
  • ஜிபே மூலம் பணம் அனுப்புகையில் உங்கள் பணம் சரியாக நீங்கள் அனுப்பும் நபருக்குச் சென்றுவிட்டதா என்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • வாடிக்கையாளர் சேவையை அடைய உங்களுடைய பேமெண்ட் ஆப் மட்டுமே பயன்படுத்தவும்
  • பணப் பரிவர்த்தனையில் எதாவது சந்தேகம் இருந்தால், வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்  - ஹெல்ப் / சப்போர்ட்) பிரிவில் உங்களுக்குத் தேவையான விவரங்களைக் அறிந்து கொள்ளவும். இணையத்தில் பட்டியலிடப்படக்கூடிய நம்பத்தகாத எண்களைத் தவிர்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com