பயனாளர்களின் விவரங்களை திருடும் டின்டெர், கிரிண்டெர் ஆப்ஸ்

நார்வேயைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வில் சுமார் 10 விதமான செயலிகள், பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களது விவரங்களைத் திருடி டிஜிட்டல் சந்தை நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகக் 
பயனாளர்களின் விவரங்களை திருடும் டின்டெர், கிரிண்டெர் ஆப்ஸ்


நார்வேயைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வில் சுமார் 10 விதமான செயலிகள், பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களது விவரங்களைத் திருடி டிஜிட்டல் சந்தை நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகக் கூறியுள்ளது.

அது வெளியிட்டிருக்கும் பட்டியலில், டேட்டிங் செயலியான டின்டெர், கிரிண்டெர், மாதவிலக்கை கணக்கிடும் க்ளூ, மைடேய்ஸ், மேக்கப் செயலியான பர்ஃபெக்ட், மத செயலி முஸ்லிம், குழந்தைகளுக்கான செயலி மை டால்கிங் டாம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செல்போன் செயலிகள் இடம்பிடித்துள்ளன.

இந்த செயலிகளை வைத்திருக்கும் பயனாளர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி, டிஜிட்டல் சந்தை நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றன.

நமது தகவல்கள் திருடப்படாமல் இருக்க ஒரே வழி என்னவென்றால், இதுபோன்ற செயலிகளை செல்போனில் டவுன்லோடு செய்யாமல் இருப்பதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com