சாம்சங் கேலக்ஸி எஸ் 20 5 எக்ஸ் ஜூமுடன் அறிமுகமாகிறது

சமீபத்திய அறிக்கையின்படி, இந்தப் போன் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறனைக் கொண்டிருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 5 எக்ஸ் ஜூமுடன் அறிமுகமாகிறது

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது அடுத்தப் புதிய ஜென் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 20 ஐ எஸ் 11  பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது, சமீபத்திய அறிக்கையின்படி, இந்தப் போன் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறனைக் கொண்டிருக்கும்.

முன்பு ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூமிற்கான ப்ரிஸங்களை வழங்கிய தென் கொரிய நிறுவனமான ஆப்ட்ரான்-டெக், சாம்சங்கிற்கு 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வழங்குவதாக கருதப்படுகிறது என்று செய்தி போர்டல் ஜிஎஸ்மரேனா தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, எதிர்கால பிரீமியம் தொலைபேசிகளில் 5x ஜூம் கேமராக்கள் மிகவும் பிரபலமாகிவிட்டதால், இந்த போனுக்கு நல்ல மதிப்பிருக்கும் என்று கணித்துள்ளனர்.

வரவிருக்கும் எஸ் 20 வரிசையில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட டிஸ்ப்ளே காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கேலக்ஸி தொலைபேசியின் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேயுடன் கூடிய மொபைல் எக்ஸினோஸ் 990  என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

108 எம்.பி கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கள் ஆகியவற்றுடன் இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@யுனிவர்ஸ்ஐஸ்) சமீபத்தில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டது, இது எஸ் 11 ஈ, எஸ் 11 மற்றும் எஸ் 11 + வரிசைக்குப் பதிலாக, அந்நிறுவனம் அதன் முதன்மைத் தொடரான எஸ் 20, எஸ் 20 + மற்றும் எஸ் 20 அல்ட்ரா வரிசைகளைத் தேர்வு செய்யும். இதன் பொருள் கேலக்ஸி எஸ் 20 எஸ் 10 இ மற்றும் எஸ் 20 + எஸ் 10 வெற்றி பெறும்.

கேலக்ஸி எஸ் 20 -  6.2 அங்குல திரை கொண்டிருக்கும். எஸ் 20 + 6.7 அங்குல திரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், டாப் வேரியண்ட் கேலக்ஸி 20 அல்ட்ரா 6.9 இன்ச் திரைடன் வர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com