ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஸியோமி தயாரிப்புகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆகியவை மார்ச் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஸியோமி தயாரிப்புகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆகியவை மார்ச் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ஸியோமி தயாரிப்புகளான ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை கடந்த மார்ச் 12ம் தேதி அறிமுகமாகின. நோட் 8 சீரிஸ் போன்களைப் போலவே நோட் 9 சீரிஸ் போன்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இதன் தொடர்ச்சியாக ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆகியவை மார்ச் 31ம் தேதி வெளியாகும் என நிறுவனத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ரெட்மி நோட் 10 விவரக்குறிப்புகள்:

6.5 அங்குலம் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர்,  20 எம்.பி + இரண்டாம் நிலை 12 எம்.பி + மூன்றாம் நிலை 5 எம்.பி கேமராவை கொண்டுள்ளது.

டிரிபிள் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் 40W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், அத்துடன் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரி உள்ளது. 

8 ஜிபி ரேம் + 128 ஜிபி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் வசதிகளுடன் வரவுள்ளது. விலை தோராயமாக ரூ. 32,700.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்:

6.5 இன்ச் அளவில் 90 ஹெர்ட்ஸ் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 SoC, 4,500mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

ரெட்மி போன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 

விலையைப் பொறுத்தவரை, ரெட்மி 10 ப்ரோ( 12 ஜிபி ரேம் + 128 ஜிபி) குறைந்தபட்சம் ரூ38,900 எனவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.42,000, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.46,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com