ஐ-போன், ஆண்ட்ராய்டு இடையே தகவல் பரிமாற்ற உதவும் தரவு சேமிப்பான்

ஐ-போன், ஆண்ட்ராய்டு இடையே தகவல் பரிமாற்ற உதவும் வகையில் சந்தையில் புதிய தரவு சேமிப்பான் அறிமுகமாகியுள்ளது. 
ஐ-எக்ஸ்பேண்ட் தரவு சேமிப்பான்
ஐ-எக்ஸ்பேண்ட் தரவு சேமிப்பான்

ஐ-போன், ஆண்ட்ராய்டு இடையே தகவல் பரிமாற்ற உதவும் வகையில் சந்தையில் புதிய தரவு சேமிப்பான் அறிமுகமாகியுள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்தின் ஐ-எக்ஸ்பேண்ட் (iXpand) எனும் தரவு சேமிப்பான், ஐ-போன் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட்டல் கொண்ட ஆண்ட்ராய்டு இடையே தரவு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

2 ஆண்டுகள் உத்திரவாதத்துடன் கிடைக்கும் இந்த ஐ-எக்ஸ்பேண்ட் தரவு சேமிப்பான் 64GB, 128GB மற்றும் 256GB என்ற வகையில் சந்தையில் கிடைக்கிறது.

டைப்- சி சார்ஜிங் மற்றும் யூ.எஸ்.பி. இணைப்புடன் வரும் இந்த ஐ-எக்ஸ்பேண்ட் ஐ-போன், ஐ-பேட் புரோ, மேக் மற்றும் டைப்-சி போர்ட்டல் கொண்ட ஆண்ட்ராய்டுகளுடன் தகவல் பரிமாற்ற உதவுகிறது.

சான் டிஸ்க் ஐ-எக்ஸ்பேண்ட் தகவல் சேமிப்பானை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம். ஐ-போன், ஆண்ட்ராய்ட் போன்ற மின்னணு சாதனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஐ-எக்ஸ்பேண்ட் தகவல் சேமிப்பான் இருக்கும் என்று இந்தியாவிற்கான அதன் விற்பனை இயக்குநர் காலிட் வானி தெரிவித்துள்ளார். 
 
ஐ-எக்ஸ்பேண்டில் பரிமாற சேமிக்கப்படும் தகவல்களை பாதுகாக்கும் வகையில், கடவுச்சொல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐ-எக்ஸ்பேண்ட் நினைவக செயலி தரவுகளையும், புகைப்படங்களையும் சேமித்து வைக்க உதவுகிறது. இணைய வசதியற்றபோதும் கூட அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளும் சிறப்பம்சமும் அதில் வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com