40 லட்சம் புதிய பயனர்களைப் பெற்ற சிக்னல், டெலிகிராம் செயலிகள்

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறை அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 40 லட்சம் புதிய பதிவிறக்கங்களை சிக்னல் மற்றும் டெலிகிராம் பெற்றுள்ளது.
40 லட்சம் புதிய பயனர்களைப் பெற்ற சிக்னல், டெலிகிராம்
40 லட்சம் புதிய பயனர்களைப் பெற்ற சிக்னல், டெலிகிராம்

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறை அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 40 லட்சம் புதிய பதிவிறக்கங்களை சிக்னல் மற்றும் டெலிகிராம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே 4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், வாட்ஸ்ஆப்புக்கு மாற்றாக 'சிக்னல்' செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

சென்சார் டவர் தரவுகளின் படி ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை 23 லட்சம் புதிய பதிவிறக்கங்களுடன் சிக்னல் முதலிடத்திலும், டெலிகிராம் 15 லட்சம் பதிவிறக்கங்களுடன் உள்ளன. புதிய தரவுகளின்படி சிக்னல் 9,483 % வளர்ச்சியும், டெலிகிராம் 15% வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதே காலப்பகுதியில் வாட்ஸ்ஆப் செயலி 13 லட்சம் புதிய பதிவிறக்கங்களை மட்டுமே பெற்று 35% சரிந்துள்ளது.

இந்தியாவில் சிக்னல் செயலி 39 லட்சம் பயனர்களையும், டெலிகிராம் செயலி 15 கோடியே 15 லட்சம் பயனர்களையும்  வாட்ஸ்ஆப் செயலி 14 கோடி பயனர்களையும் கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com