வாட்ஸ்ஆப் பயன்பாட்டைத் தொடர வேண்டுமா? - 79% இந்தியர்கள் மறுபரிசீலனை

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்த போதிலும், வாட்ஸ்ஆப்பை இனியும் தொடர வேண்டுமா என 79 சதவீத இந்தியர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்த போதிலும், வாட்ஸ்ஆப்பை இனியும் தொடர வேண்டுமா என 79 சதவீத இந்தியர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். 

புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியிருந்தது.  இதையடுத்து தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் பலர் மாற்று செயலியை நோக்கித் திரும்பினர். 

இந்நிலையில் இந்த நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்தது. 

எனினும் பலர் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாற்று செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போதைய பயன்பாட்டாளர்களில் 79 சதவீத இந்தியப் பயனர்கள் வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமா என மறுபரிசீலனை செய்து வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

குருகிராமைச் சேர்ந்த சைபர் மீடியா ரிசர்ச் நடத்திய ஆய்வில், 79 சதவீதத்தினர் வாட்ஸ்ஆப்பைத் தொடர வேண்டுமா என மறுபரிசீலனை செய்கிறார்கள், அவர்களில் 28 சதவீதம் பேர் மே 2021ல் அதன் புதிய கொள்கையை அமல்படுத்திய பின்னர் வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. 

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராமிற்கும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலிக்கும் மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கை குறித்த அறிவிப்பு தொடர்பாக 10 சதவீதம் பேர் அலட்சியமாக உள்ளனர். 49 சதவீதம் பேர் கோபம் அடைந்ததாகவும், வாட்ஸ்ஆப் மீதான நம்பிக்கை போய்விட்டது என்று 45 சதவீதம் பேரும், நம்பிக்கை மீறல் என 35 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com