ஓடிடி தளங்களில் இந்தியர்கள் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்தியர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் 18,800 கோடி நிமிடங்கள் செலவிட்டதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. 
ஓடிடி தளங்களில் இந்தியர்கள் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா?

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்தியர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் 18,800 கோடி நிமிடங்கள் செலவிட்டதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. 

இதில் 6,900 கோடி நிமிடங்களுக்கு சீரியல் தொடர்களையும், 3,100 கோடி நிமிடங்களுக்கு திரைப்படங்களையும் பார்த்துள்ளனர்.

வூட் செலக்ட் மற்றும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் அதிகம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வூட் செயலி (31%) சீரியல்களிலும், ஹாட்ஸ்டார் திரைப்படங்களிலும் (33%) பார்வையாளர்களிடம் முன்னுரிமையைப் பெற்றுள்ளது. 

கரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் தாங்கள் வெளியில் செல்ல முடியாத காரணத்தால் இதுபோன்ற ஓடிடி தளங்களின் பயன்பாடு 2020-2021 காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாகவும் இதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பெங்களூரைச் சேர்ந்த ரெட்ஸீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனத்தைச் சேர்ந்த நிகில் தலால் மற்றும் உஜ்ஜவால் சௌத்ரி இதுகுறித்து, ஜியோ ஃபைபர் உள்ளிட்ட பிராண்ட்பேண்ட் ஆபரேட்டர்கள் இலவசமாக அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் தளங்களைப் பார்ப்பதற்கான ஆபர்களை வழங்குவதும் ஓடிடி தளங்களின் இந்த வளர்ச்சிக்கு  காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரி 2021இல் ஓடிடி தளங்களில் கட்டணம் செலுத்தி பார்ப்போரின் வளர்ச்சி விகிதம் 35%, சந்தாக்கள் 8%, சந்தா வருவாய் 42% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி மாதத்தில் பார்க்கும் விகிதம் (watch-time) குறைந்துள்ளது. 

அதேநேரத்தில் நல்ல தரத்துடன் புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும்போது ஓடிடி தளங்கள் மேலும் வளர்ச்சி காணும் என்றும் கரோனா பொதுமுடக்க காலத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வூட் செலக்ட், ஹோய்சோய் மற்றும் சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட தளங்கள் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com