கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 4.07 கோடி டன்

 பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பரில் 4.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 4.07 கோடி டன்

 பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பரில் 4.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2020 செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியானது 4.05 கோடி டன்னாக இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் நிலக்கரி உற்பத்தியானது 4.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

2021 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் நிலக்கரி உற்பத்தியானது 23.60 கோடி டன்னிலிருந்து 24.98 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, 5.8 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த செப்டம்பரில் நிலக்கரி விற்பனை 4.67 கோடி டன்னிலிருந்து 4.83 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் இந்த விற்பனை 25.51 கோடி டன்னிலிருந்து 30.77 கோடி டன்னாக உயா்ந்துள்ளது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 2023-24-க்குள் நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் தவித்து வரும் சூழலில் கோல் இந்தியாவின் உற்பத்தி அதிகரித்துள்ளது சாதகமான அம்சமாக பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com