இந்தியாவில் அறிமுகமானது ‘லஞ்ச்கிளப்’ செயலி

அமெரிக்க நிறுவனத்தின் லஞ்ச்கிளப் செயலி தற்போது இந்தியாவில் பொதுமக்களின் உபயோகத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் அறிமுகமானது ‘லஞ்ச்கிளப்’ செயலி

அமெரிக்க நிறுவனத்தின் லஞ்ச்கிளப் செயலி தற்போது இந்தியாவில் பொதுமக்களின் உபயோகத்திற்கு வந்துள்ளது.

தொழில் ரீதியாக ஒற்றை கருத்து அல்லது நோக்கம் உடையவர்களை இயந்திர கற்றல்(ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்) முறையில் இணைக்கும் செயலி தான் லஞ்ச்கிளப்.

இந்த செயலியை மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்து நுழைந்த பிறகு, உபயோகிப்பவரின் பொதுவான ஆர்வங்கள், குறிக்கோள்கள் உள்ளிட்ட கேள்விகளை கேட்கப்படும். அதற்கு பதிலளித்த சில மணிநேரங்களில் நமது பதிலுக்கு ஒற்றுப்போகும் வேறு ஒரு நபருடன் நேரில் சந்திக்க தொடர்புபடுத்தும். தற்போது கரோனா காரணத்தால் விடியோ கால் மூலம் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்கின்றன.

இந்த நிறுவனத்தின் அடுத்த குறிக்கோளாக, வரும் 2021 இறுதிக்குள் 10 லட்சம் இந்திய பயனர்களை சென்றடைவதாக உள்ளது.

லஞ்ச்கிளப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளாடிமிர் நோவகோவ்ஸ்கி கூறுகையில்,

“தொழில்முறை தொடர்புகள் என்று வரும்போது உலகளவில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நங்கள் அமெரிக்க சந்தையில் பெரும் வெற்றி மற்றும் வளர்ச்சியை கண்டுள்ளோம். இந்தியாவிலும் இது பிரபலமாகும் என நம்புகிறோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com