ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த மாதம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த மாதம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,90,93-ஆக இருந்தது.

2021-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,49,393-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த முறை விற்பனை 12 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் கடந்த ஆண்டின் நவம்பா் மாதத்தில் 3,28,862-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை, இந்த ஆண்டு நவம்பரில் 3,79,839 -ஆக அதிகரித்துள்ளது.

எனினும், நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த ஆண்டு நவம்பரில் 20,531-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது 11,093-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com