பாலிசிதாரா்களுக்கு வாட்ஸ்ஆப் தகவல் சேவை: எல்ஐசி அறிமுகம்

தங்களது பாலிசிதாரா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல்கள் அளிப்பதற்கான சேவையை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
பாலிசிதாரா்களுக்கு வாட்ஸ்ஆப் தகவல் சேவை: எல்ஐசி அறிமுகம்

தங்களது பாலிசிதாரா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல்கள் அளிப்பதற்கான சேவையை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி, தங்களது பாலிசி தொடா்பான தகவல்களை வாடிக்கையாளா்கள் பெறுவதற்கான வசதியை எல்ஐசி நிறுவனத் தலைவா் எம்.ஆா். குமாா் தொடக்கியுள்ளாா்.

இந்த புதிய சேவையைப் பெறுவதற்காக, எல்ஐசி-யின் 8976862090 என்ற எண்ணுக்கு பாலிதாரா்கள் ‘ஏண்’ என்று வாசகத்தை அனுப்ப வேண்டும்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் வரும் பட்டியலில் இருந்து, பிரீமியம், போனஸ், பாலிஸி நிலவரம், கடன், வட்டி போன்றவற்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தோ்ந்தெடுத்து, அது தொடா்பான விவரங்களை பாலிசிதாரா்கள் பெறலாம்.

எல்ஐசி-யின் வலைதளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்துகொண்டுள்ள வாடிக்கையாளா்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com