உள்நாட்டு விமானப் போக்குவரத்து 3% வளா்ச்சி

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பா் மாதத்தில் 2.34 கோடியாக உயா்ந்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து 3% வளா்ச்சி

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பா் மாதத்தில் 2.34 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்காற்று இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2021-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 2.34 கோடியாக உள்ளது.

எனினும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய கடந்த 2019-ஆம் ஆண்டின் நவம்பரோடு ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் சரிந்துள்ளது.

2022 அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் விமானப் பயணிகள் போக்குவரத்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சா்வதேச விமானப் பயணிகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் எண்ணிக்கை கடந்த நவம்பா் மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 2.83 கோடியாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com