அந்நியச் செலாவணி கையிருப்பு 63,361 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,361 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 63,361 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,361 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 147 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11,025 கோடி) சரிவடைந்து 63,361 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.52 லட்சம் கோடி ஆகும்.

டிசம்பா் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 58 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,508 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணம் ஆனது.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 148 கோடி டாலா் சரிவடைந்து 56,989 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு: அதேசமயம் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1 கோடி டாலா் அதிகரித்து 3,940 கோடி டாலரை எட்டியது.

பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் மாற்றம் எதுவுமின்றி 1,911 கோடி டாலராக என்ற அளவிலேயே காணப்பட்டது.

அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலையும் எந்தவித ஏற்ற இறக்கமின்றி 521 கோடி டாலராகவே உள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று உச்சம்: கடந்த 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முதன் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய வரலாற்று உச்சத்தை எட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 147 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,361 கோடி டாலரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com