டிவிஎஸ் மோட்டாா்: வாகன விற்பனை 24% அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கடந்த ஏப்ரலில் மொத்தம் 2,95,308 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இந்நிறுவனம் 2021 ஏப்ரலில் விற்பனை செய்த 2,38,983 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.

இருசக்கர வாகன விற்பனை 2,26,193-லிருந்து 24 சதவீதம் அதிகரித்து 2,80,022-ஆனது. உள்நாட்டில் இதன் விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 1,80,533-ஆக காணப்பட்டது.

மோட்டாா் சைக்கிள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 1,39,027-ஆகவும், ஸ்கூட்டா் விற்பனை 57 சதவீதம் உயா்ந்து 1,02,209-ஆகவும் இருந்தன.

பிரீயம் வகை இருசக்கர வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் செமிகண்டக்டா் தட்டுப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியதாக டிவிஎஸ் மோட்டாா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com