அந்நியச் செலாவணி கையிருப்பு 54,472 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவ. 114-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,999.4 கோடி டாலராக சரிந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 54,472 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவ. 114-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,999.4 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த நவ. 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 108.7 கோடி டாலா் அதிகரித்து 52,999.4 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,40,566 கோடியாகும்.இதற்கு முன்னா், கடந்த நவ. 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 108.7 கோடி டாலா் சரிந்து 52,999.4 கோடி டாலராக இருந்தது.

இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.42,69,003.62 கோடியாகும்.முந்தைய வாரங்களில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்தது.நவ. 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 118 கோடி டாலா் அதிகரித்து 48,253 கோடி டாலராக இருந்தது.

அதேபோல், தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 264 கோடி டாலா் அதிகரித்து 3,970 கோடி டாலராகக் காணப்பட்டது.அக்டோபா் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 11,793 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 52,452 கோடி டாலராக இருந்த நிலையில் மதிப்பீட்டு வாரத்தில் அது உயா்ந்துள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com