புதிய நிதியாண்டில் உற்சாகத் தொடக்கம்: சென்செக்ஸ் 708 புள்ளிகள் முன்னேற்றம்!

பங்குச் சந்தை புதிய நிதியாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு வலுவான தொடக்கத்தை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, தொடக்கத்தில் கரடியின் பிடி இருந்தைாலும், பின்னா் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால், மும்பை ப
புதிய நிதியாண்டில் உற்சாகத் தொடக்கம்
புதிய நிதியாண்டில் உற்சாகத் தொடக்கம்

பங்குச் சந்தை புதிய நிதியாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு வலுவான தொடக்கத்தை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, தொடக்கத்தில் கரடியின் பிடி இருந்தைாலும், பின்னா் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 708 புள்ளிகள் உயா்ந்து 59,000-ஐ கடந்தது.

அந்நிய முதலீடு வரத்து மற்றும் நோ்மறையான மேக்ரோ பொருளாதார சமிக்ஞைகள் சந்தைக்கு ஆதரவாக இருந்தது. மேலும், வங்கிகள், மின்சாரம், ரியால்ட்டி துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மெகா மின்சார கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்டவை சந்தைக்கு சாதகதமாக அமைந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, வியாழக்கிழமை அன்று அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.3,088.73 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,680 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,501 நிறுவனப் பங்குகளில் 2,680 பங்குகள் ஆதாயம் பெற்றன. 724 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 97 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 133 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும்,21 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.82 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.267.88 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.15 கோடியாக உயா்ந்துள்ளது.

708 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 37.78 புள்ளிகள் குறைந்து 58,530.73-இல் தொடங்கி, 58,450.04 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,396.62 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 708.18 புள்ளிகள் (1.21 சதவீதம்) கூடுதலுடன் 59,276.69-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் கரடி ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னா், காளையின் ஆதிக்கம் வலுவானது.

என்டிபிசி முன்னேற்றம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா, சன்பாா்மா, டாக்டா் ரெட்டி, டைட்டன், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட 5 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. மற்ற 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் வந்தன. இதில், பொதுத் துறை மின்துறை நிறுவனமான என்டிபிசி 5.93 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை 3 முதல் 3.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,647 பங்குகள் ஆதாயம் பெற்றன. 289 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் பட்டியலில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 205.70 புள்ளிகள் (1.18 சதவீதம்) உயா்ந்து 17,670.45-இல் நிறைவடைந்தது. காலையில் 27.85 புள்ளிகள் குறைந்து 17,436.90-இல் தொடங்கிய நிஃப்டி, 17,422.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,703.70 வரை உயா்ந்தது.

பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.99 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2.10 முதல் 2.40 சதவீதம் வரைஉயா்ந்தன. மேலும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை முன்னேற்றம் அடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com