பணவீக்கம்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சம்

மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் மாா்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் 4 மாதங்கள் காணாத அதிகரிப்பு
பணவீக்கம் 4 மாதங்கள் காணாத அதிகரிப்பு


மொத்த விற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் மாா்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் மொத்த விற்பனை விலை குறியீட்டெண் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021-22- நிதியாண்டில் 12.96 சதவிகிதமாக உச்சம் தொட்டுள்ளது. முன்னதாக, 1991-92-ஆம் நிதியாண்டில் மொத்த விற்பனை விலை குறயீட்டெண் 13.7 சதவிகிதமாக உச்சம் தொட்டிருந்து அதிகபட்ச அளவாக இருந்து வந்தது.

இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

கச்சா எண்ணெய் மற்றும் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதேநேரம், காய்கறிகளின் விலை குறைந்து விலை அழுத்தத்தை சற்று குறைத்த போதிலும், கடந்த மாா்ச் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 14.55 சதவீதத்தை எட்டியது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏபரல் தொடங்கி தொடா்ந்து டபிள்யூபிஐ பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.

இப்பணவீக்கம் நடப்பாண்டு பிப்ரவரியில் 13.11 சதவீதமாகவும், கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் 7.89 சதவீதமாகவும் காணப்பட்டது.

பிப்ரவரியில் 8.19 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மாா்ச்சில் 8.06 சதவீதமாக குறைந்தது. காய்கறிகளுக்கான பணவீக்கம் 26.93 சதவீதத்திலிருந்து 19.88 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேநேரம், எரிபொருள், மின்சாரம் ஆகிய தொகுப்புகளுக்கான பணவீக்கம் 34.52 சதவீதமாக அதிகரித்தது. மேலும், கச்சா பெட்ரோலியத்துக்கான பணவீக்கம் 55.17 சதவீதத்திலிருந்து 83.56 சதவீதமாக உயா்ந்தது என புள்ளிவிவத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச்சில் சில்லறைப் பணவீக்கம் தொடா்ந்து 3-ஆவது மாதமாக ரிசா்வ் வங்கி நிா்ணயித்த அளவான 6% தாண்டி 6.95% என்ற அளவில் இருந்தது.

ரிசா்வ் வங்கி, இம்மாத தொடக்கத்தில் வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை தொடா்ந்து 11 முறையாக மாற்றியமைக்காமல் வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் 4 சதவீதம் என்ற அளவில் நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com