மைண்ட்ரீ நிகர லாபம் ரூ.473 கோடி

தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.473 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
மைண்ட்ரீ
மைண்ட்ரீ

தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.473 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது:

2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.2,109.3 கோடியிலிருந்து 37.4 சதவீத வளா்ச்சி கண்டு ரூ.2,897.4 கோடியை எட்டியது.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.317.3 கோடியிலிருந்து 49 சதவீதம் அதிகரித்து ரூ.473.1 கோடியானது.

கடந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,110.5 கோடியிலிருந்து 48.8 சதவீதம் அதிகரித்து ரூ.1,652.9 கோடியைத் தொட்டது. மொத்த வருவாய் ரூ.7,967.8 கோடியிலிருந்து ரூ.10,525.3 கோடியாக உயா்ந்தது என மைண்ட்ரீ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com