ராம்கோ சிமெண்ட்ஸ்: நிகர லாபம் 36% சரிவு

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 36.37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
ராம்கோ சிமெண்ட்ஸ்: நிகர லாபம் 36% சரிவு

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 36.37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் 44 சதவீதம் அதிகரித்து ரூ.1,785.64 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.1,240 கோடியாக காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.171.67 கோடியிலிருந்து 36.37 சதவீதம் குறைந்து ரூ.109.23 கோடியானது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சிமெண்ட் விலை குறைந்துபோனதையடுத்து நிறுவனம் ஈட்டிய லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, செலவினம் ரூ.988.46 கோடியிலிருந்து ரூ.1,630.59 கோடியாக அதிகரித்தது. ஆக, முதல் காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் 64.96 சதவீதம் உயா்ந்ததாக ராம்கோ சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் பங்கின் விலை 2.59 சதவீதம் உயா்ந்து ரூ.752.30-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com