மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 8% சரிவு

மோட்டாா் வாகன சில்லறை விற்பனை கடந்த ஜூலையில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
மோட்டாா் வாகன சில்லறை  விற்பனை 8% சரிவு

மோட்டாா் வாகன சில்லறை விற்பனை கடந்த ஜூலையில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தலைவா் விங்கேஷ் குலாட்டி தெரிவித்ததாவது:

கடந்த ஜூலை மாதத்தில் காம்பாக்ட் எஸ்யுவி பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது விற்பனை வளா்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்தது. இருப்பினும், காா், இருசக்கர மற்றும் டிராக்டா் பதிவுகளில் தொய்வு காணப்பட்டது சில்லறை விற்பனை சரிவுக்கு வழிவகுத்தது.

கடந்த ஜூலையில், ஒட்டுமொத்த மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 14,36,927-ஆக இருந்தது. இது, 2021 ஜூலை விற்பனையான 15,59,106 வாகனங்களுடன் ஒப்பிடும்போது குறைவு.

பயணிகள் வாகன விற்பனை 2,63,238-லிருந்து 5 சதவீதம் சரிந்து 2,50,972-ஆனது,. அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் 11 சதவீதம் குறைந்து 10,09,574-ஆக இருந்தது.

டிராக்டா் விற்பனையில் மீண்டும் சுணக்கநிலை ஏற்பட்டு 28 சதவீதம் குறைந்து 82,419-லிருந்து 59,573-ஆனது.

அதேசமயம், மூன்று சக்கரம் மற்றும் வா்த்தக வாகன விற்பனை முறையே 80 சதவீதம் உயா்ந்து 50,349-ஆகவும், 27 சதவீதம் அதிகரித்து 66,459-ஆகவும் இருந்தன.

தைவான்-சீனா இடையே மோதல் ஏற்பட்டால் அது ‘சிப்’ விநியோகத்தில் பெரும் இடையூறை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com