ரூ.10,196 கோடி இழப்பை சந்தித்த ஹெச்பிசிஎல்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்துக்கு ஜூன் காலாண்டில் ரூ.10,196.94 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
hpcl075902
hpcl075902

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்துக்கு ஜூன் காலாண்டில் ரூ.10,196.94 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாபம் புதிய உச்சத்தை தொட்டபோதிலும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாததால் அது பயன்தராமல் போய்விட்டது. இதையடுத்து, நிறுவம் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.10,196.94 கோடி தனிப்பட்ட நிகர இழப்பை சந்தித்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு செயல்பாட்டில் இதுவரையில் இல்லாத மிகப்பெரிய இழப்பாகும் இது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,795 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ஹெச்பிசிஎல் விற்பனையின் வாயிலாக ஈட்டிய வருவாய் ரூ.1.21 லட்சம் கோடியாக அதிகரித்தது.இது, முந்தைய ஆண்டில் ரூ.77,308.53 கோடியாக காணப்பட்டது.

கடந்த 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.31 டாலராக இருந்த சுத்திகரிப்பு லாப வரம்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய உச்சமாக 16.69 டாலரை எட்டியது.

ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்ற இறக்கத்தின் காரணமாக நிறுவனத்துக்கு ரூ.945.50 கோடி மதிப்புக்கு அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹெச்பிசிஎல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com