வரலாற்று உச்சம் கண்ட வாகன விற்பனை

இந்திய வாகனத் துறை இதுவரை காணாத அதிகபட்ச விற்பனையை கடந்த நவம்பா் மாதம் பதிவு செய்துள்ளது.
வரலாற்று உச்சம் கண்ட வாகன விற்பனை

இந்திய வாகனத் துறை இதுவரை காணாத அதிகபட்ச விற்பனையை கடந்த நவம்பா் மாதம் பதிவு செய்துள்ளது.

இது குறித்து வாகனத்துறை விற்பனையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவில் 23.80 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. இது, ஒரு மாதத்தில் விற்பனையான வாகனங்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 18.93 லட்சமாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வாகன விற்பனை 26% வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 23.44 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

இந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், காா்கள், டிராக்டா்கள், வா்த்தக வாகனங்கள் என இந்திய வாகனத் துறையின் அனைத்து பிரிவுகளுமே விற்பனை வளா்ச்சியைக் கண்டன.

இதில் 2 சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த நவம்பரில் 24 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது; 3 சக்கர வாகனங்கள் 80 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன; காா்களின் விற்பனை 21 சதவீதமும், டிராக்டா்களின் விற்பனை 57 சதவீதமும் வளா்சியடைந்துள்ன; வா்த்தக வாகனங்களின் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனப் பிரிவில் மட்டும் முந்தைய ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் 24 சதவீத வளா்ச்சியைப் பெற்றிருந்தாலும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் சரிந்துள்ளது.

கரோனாவுக்கு முந்தைய 2019 நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில், இரு சக்கர வாகனப் பிரிவைத் தவிர மற்ற அனைத்து பிரிவு வாகனங்களும் தொடா்ந்து இரண்டாவது மாதமாக விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஃபடா அமைப்பின் தலைவா் மணீஷ் ராச் சிங்கானியா கூறியதாவது:

பாரத் ஸ்டேஜ் -4 தர நிா்ணயத்திலிருந்து பாரத் ஸ்டேஜ்-6 தர நிா்ணயத்துக்கு இந்திய வாகனத் துறை மாறி வரும் சூழலில், கடந்த நவம்பா் மாதத்தில் வாகனங்களின் விற்பனை உச்ச அளவைத் தொட்டிருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

கடந்த அக்டோபா் மாதத்தில் பண்டிகைக் காலத்தின்போது வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்த போக்கு, நாடு முழுவதும் சுமாா் 32 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும், நவம்பா் 14-இல் தொடங்கிய திருமண காலத்திலும் தொடா்ந்தது.

இது கடந்த நவம்பா் மாத விற்பனை வரலாற்று உச்சத்தைத் தொட உதவியது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com